கல்வி திட்டத்தில் ரூ. 1 கோடி ஊழல்-5 பேர் சஸ்பெண்ட்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்எஸ்ஏ) திட்டத்தில் ரூ. 1 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதையடுத்து 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், மற்றும் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியோர் புகார் தெரிவித்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உண்டு-உறைவிடப் பள்ளி, பாலர் திட்டத்தில், பயிற்றுனர்களுக்கு பயிற்சி முகாம்கள் போன்றவைகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் முறையற்ற வகையில் வரவு-செலவு செய்துள்ளதும், ரசீதுகள், வவுச்சர்கள் இன்றி பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம், பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கை தந்தது.
இதன் பேரில் வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த விஸ்வநாதன் (தற்போது நாமக்கல் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.) உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், அலுவலக கண்காணிப்பாளர் கிரினி வாசன், செல்வராஜ், இள நிலை உதவியாளர் ரமேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications