சட்டசபையில் அதிமுக-மதிமுக வெளிநடப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்காததற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி சட்டசபையில் அதிமுக, மதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று சட்டசபையில் அதிமுக துணைத் தலைவர் பன்னீர்செல்வமும் கொறடா செங்கோட்டையனும் தேவர் ஜெயந்தியன்று பசும்பொன்னி்ல் ஜெயலலிதாவின் கார் மீது கல் வீச்சப்பட்டது குறித்த பிரச்சனையைக் கிளப்ப முயன்றனர்.
சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி தர மறுக்கவே, அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்காத திமுக அரசும் முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
அவர்களை அமைதியாக உட்காருமாறு சபாநாயகர் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை அவர்கள் கேட்கவில்லை. அவர்களுடன் மதிமுக எம்எல்ஏக்களும் அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
அதே நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், புலி ஆதரவாளர்களைக் கைது செய்யக் கோரி காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷமிட்டதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
இந் நிலையில் அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications