கப்பல் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு 100 கண்டெய்னர் நிவாரணப் பொருட்கள்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக 100 கண்டெய்னர் நிவாரணப் பொருட்கள் வருகிற 13ம் தேதி கப்பல் மூலம் அனுப்பப்படவுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு நிவாரண நிதியையும், பொருட்களையும் சேகரித்து வருகிறது. இதில் நிவாரணப் பொருட்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய கப்பல் கழகம் (ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) மேற்கொண்டுள்ளது. அரிசி, பருப்பு, துணி வகைகள் உள்ளிட்டவை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.
100 கண்டெய்னர்களில் இந்தப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். இதில் 40 அடி நீளம் கொண்ட 17 கண்டெய்னர்களும், 20 அடி நீளம் கொண்ட 83 கண்டெய்னர்களும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு கண்டெய்னரில் 20 முதல் 25 மெட்ரிக் டன் பொருட்கள் வைக்க முடியும்.
கொண்டு செல்லப்படவேண்டிய பொருட்கள் தற்போது கண்டெய்னர்களில் ஏற்றுவதற்காக கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. 12ம் தேதியன்று அனைத்து கண்டெய்னர்களும், துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படும்.
3 கப்பல்கள் மூலம் இவை இலங்கைக்கு கொண்டு செல்லப்படும். முதல் கப்பலான எம்.வி. கான்டிஜோர்க், 13ம் தேதி சென்னையிலிருந்து இலங்கை புறப்பட்டு 15ம் தேதி கொழும்பு துறைமுகத்தை சென்றடையும்.
அங்கிருந்து தமிழர் பகுதிகளுக்கு உடனடியாக பொருட்களை விநியோகிக்க இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications