தீவிர அரசியல்: ரஜினியை 'அழைத்த' அத்வானி!

பல்வேறு பிரச்சனைகளில் தேசிய கண்ணோட்டம் கொண்டுள்ள ரஜினி ஒதுங்கியிருக்கக் கூடாது என்றும் அத்வானி கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி நேற்று சென்னை வந்திருந்தார். தனது சுயசரிதையான என் தேசம்; என் வாழ்க்கை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அத்வானியின் மனைவி கமலாதேவி, மகள் பிரதீபா, துக்ளக் ஆசிரியர் சோ, பாஜக தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், மாநிலத் தலைவர் இல.கணேசன், மேலிட பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் மாலையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அத்வானியுடன் கலந்து கொண்டார் ரஜினி. அவருக்கு தனது புத்தகத்தின் பிரதிகளை வழங்கிய அத்வானி, விழாவுக்கு அவர் வந்தது குறித்து பெரும் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
விழா முடிந்த பிறகு பேட்டியளித்த அத்வானி கூறியதாவது:
நீண்ட நாட்களாகவே சென்னைக்கு வரும்போது தனது வீட்டுக்கு வர வேண்டும் என ரஜினி அழைப்பு விடுத்து வந்தார். ரஜினி அற்புதமான மனிதர். அவரைச் சந்திக்க வேண்டும் என நானும் ஆவலுடன் இருந்தேன்.
ஆனால் அதற்கான நேரம் இப்போதுதான் வாய்த்தது.
எனக்கு அவர் மிகச் சிறப்பான தேநீர் விருந்து அளித்தார். அவர் நடித்த சிவாஜி டிவிடியின் ஆங்கில சப்டைட்டிலுடன் கூடிய டிவிடியை எனக்கு அளித்துள்ளார். நிச்சயம் பார்ப்பேன்.
ஆண்டவன் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என ரஜினி கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். நான் அவரிடம், 'உங்கள் நிலைப்பாடு அற்புதமானது. நீங்கள் நிச்சயம் அரசியலுக்கு வருவீர்கள். அதற்கு என் ஆசீர்வாதம்', என்று கூறினேன்.
வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தருமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். அது மரியாதை நிமித்தம் நான் கேட்டுக் கொண்டது. அவரைக் கட்டாயப்படுத்தவில்லை என்றார் அத்வானி.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications