சென்னை சட்டக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!
சென்னை: சட்டக் கல்லூரியில் மாணவர் மோதலைத் தடுக்க காவல் துறையினரை அழைக்க மறுத்து, வன்முறையை வேடிக்கை பார்த்த கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த அறிவிப்பை அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று பல மணிநேரம் தொடர்ந்து மோதல் நடந்துள்ளது. ஆனால் இதை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு கல்லூரி முதல்வருக்குதான் உள்ளது.
முதல்வர் அனுமதி இன்றி கல்லூரி வளாகத்துக்குள் காவல்துறையினர் நுழையக் கூடாது என அரசு உத்தரவிட்டிருப்பதால், போலீசாரும் கண்ணெதிரே நடந்த காட்டுமிராண்டித்தனத்தை கைக்கட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதற்கு முன் நடந்த கலவரங்களின்போதும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருந்தனர் அப்போதைய கல்லூரி முதல்வர்கள்.
நேற்றைய கலவரத்தின் போது கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ், எல்லாம் 'முடிந்த' பிறகுதான் வெளியில் தலை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் துறையிடம் நடந்த சம்பவம் குறித்து முறையாகப் புகார் செய்வேன் என்று கடைசியில் அவர் கூறியது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட, அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்யக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டசபையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:
இந்த மோதலை உரிய நேரத்தில் தடுக்க தவறியவர் கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் என்பது உண்மைதான். அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளோம். இந்த வன்முறை தொடராத வண்ணம் தடுக்க சட்டக் கல்லூரி விடுதி மூடப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள மற்ற சட்டக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றார் துரைமுருகன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications