சென்னையில் இன்னொரு மோதல்-தமிழ் மாணவர்களைத் தாக்கிய வட இந்தியர்கள்!

சென்னை சட்டக் கல்லூரி வன்முறைச் சம்பவம் மக்கள் மனதை விட்டு இன்னும் அகலாத நிலையில், சென்னை அருகே உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கும், வட இந்திய மாணவர்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டுள்ளது. இதில் 3 தமிழக மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
கேளம்பாக்கம் அருகே படூர் என்ற இடத்தில் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை உள்ளன.
இங்கு இன்று காலை விடுதி உணவகத்தில் கொடுக்கப்பட்ட சாப்பாடு தொடர்பாக வார்டனுக்கும், வட இந்திய மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வட இந்திய மாணவர்கள், வார்டனை அடிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து ஒன்று திரண்ட தமிழக மாணவர்கள், வட இந்திய மாணவர்களைத் தடுக்க முயன்றனர்.
தாக்க விடாமல் தடுத்ததால், தமிழக மாணவர்கள் மீது வட இந்திய மாணவர்கள் தாக்குதலில் இறங்கினர். இதில் 3 தமிழ மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
போலீஸாருக்குத் தகவல் சென்று அவர்கள் விரைந்து வந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் மூண்டு விடாமல் தடுக்கும் வகையில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications