மாணவர் மோதலை தடுக்காதது ஏன்? போலீஸுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் ஒரு பிரிவு மாணவர்களை இன்னொரு பிரிவு மாணவர்கள் கொலை வெறியுடன் தாக்கியபோது அதை ஏன் போலீஸார் தடுக்கவில்லை என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சுவாமிநாதன், ஸ்டான்லி உள்ளிட்ட 6 வக்கீல்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர், போலீஸார், கல்லூரி முதல்வர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
சட்டக் கல்லூரியில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க கல்வியாளர்கள், வக்கீல்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்குமாறு பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்தும் அதை போலீஸார் செவிமடுக்காதது ஏன். மாணவர்கள் அடிபடுவதை தடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications