'பொருளாதார நெருக்கடியால் வங்கிகளுக்கு பாதிப்பில்லை'
நெல்லை: சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இந்திய வங்கிகளுக்கு எந்தவகையிலும் பாதிப்பு இல்லை என்று ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜோசப் கூறியுள்ளார்.
மைக்கர் எனப்படும் காந்த மை குறியீட்டு உணர்வு இயந்திரம் தமிழகத்தில் 9வதாக நெல்லை ஸ்டேட் பாங்கில் அமைக்கப்பட்டுள்ளது.
அதிவேக காசோலை பண பரிவர்த்தனைக்காக ரூ.3 கோடி மதிப்பிட்டில் நிர்மணிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் ஜோசப் துவக்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி, திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், மதுரை ஆகிய நகரங்களில் அடுத்தப்படியாக மைக்கர் செக் பரிவர்த்தனை மையம் நெல்லையில் துவக்கப்பட்டுள்ளது.
தினமும் 30 ஆயிரம் செக்குகள் வரை இந்த இயந்திரத்தால் கையாள முடியும். இந்தியாவில் 11 ஆயிரம் கிளைகளுடன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இயங்கி வருகிறது.
அனைத்து கிளைகளும் கம்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு கோர் பாங்க் ஆப் இந்தியா ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உலகத்திலேயே மிகப் பெரிய நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கடந்த ஒரு ஆண்டில் 17 வர்த்தக வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இந்த சர்வதேச நெருக்கடியால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.
கடந்த 1961ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் எந்த வர்த்தக வங்கியும் திவால் ஆகவில்லை. உலக பொருளாதாரத்தில் சுனாமி வந்த போதிலும் இந்திய வங்கிகள் லாபத்தில் இயங்கு வருகின்றன.
இந்தியாவில் நிதி நிலைமை சீராக உள்ளது. இந்தியாவில் 50 சதவீதம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை. 300 மில்லியன் மக்கள் நலனுக்காக வங்கி கணக்கு துவங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications