பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விலைவாசி உயர்வு, மின் வெட்டு ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிக மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தலைமை தாங்கினார்.

தேமுதிக மகளிர் அணி சார்பில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகியவற்றைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னைப் போராட்டத்தி்ற்குப் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கண்ணில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு அவர் போராட்டம் நடத்தினார்.

சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேமுதிக மகளிர் அணி சார்பில் தாம்பரம் தாசில்தார் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

இதேபோல தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+