கோவையில் அண்ணா நூற்றாண்டு விழா - கருணாநிதி பங்கேற்பு
கோவை: கோவையில் திமுக சார்பில் இன்று அண்ணா நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.
திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் சார்பில் கோவையில் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக இன்று காலை முதல்வர் கருணாநிதி கோவை வந்தார். அவருக்கு திமுக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை வட கோவை சிவானந்தா காலனியில் அண்ணா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை தாங்குகிறார்.
மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநில அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், பரிதி இளம் வழுதி, துரைமுருகன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
முதல்வர் கருணாநிதி சிறப்புரை நிகழ்த்துகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோவையில் இரவு தங்கும் முதல்வர் நாளை காலை சென்னை திரும்புகிறார்.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கோவை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications