சந்திராயன் திட்ட இயக்குநர் அண்ணாதுரைக்கு பாராட்டு விழா

இந்தியாவின் முதல் நிலவுப்பயணமான சந்திராயன்-1 வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் அண்ணாதுரை மயில்சாமி.
இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். சந்திராயன் திட்ட வெற்றியால் கோதவாடி கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து கோதவாடி ஊர் மக்கள் சார்பில் அண்ணாதுரைக்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மைதானத்தில் இதற்கான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில், மனைவி வசந்தி, தந்தை மயில்சாமி, தாயார் பாலசரஸ்வதி, தம்பி மோகன சுந்தரம் மற்றும் உறவினர்களுடன் கலந்து கொண்டார் அண்ணாதுரை.
மெயின் ரோட்டிலிருந்து ஊர் வரை நடந்தே வந்தார் அண்ணாதுரை. அவருக்கு மாலை அணிவித்து ஊர் மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பின்னர் தான் படித்த பள்ளியில் அண்ணாதுரை தேசியக் கொடியேற்றி வைத்து சல்யூட் செய்தார். பிறகு பார்வையாளர் குறிப்பேட்டில், எனக்கு, அ, ஆ சொல்லிக் கொடுத்த எனது அருமை ஆரம்பக் கல்வி நிலையத்திற்கு எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்கள் என்று தமிழில் எழுதி தமிழில் கையெழுத்திட்டார்.
பிறகு குத்துவிளக்கேற்றி வைத்தார். அதன் பின்னர் பாராட்டு விழா தொடங்கியது. விழாவின்போது தனது சொந்த செலவில், ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு இலவசமாக ஒரு கம்ப்யூட்டரையும் அண்ணாதுரை வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications