கல்லூரி வன்முறை: உசிலம்பட்டி, விருதுநகரில் பஸ்கள் மீது கல்வீச்சு
உசிலம்பட்டி: சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி, மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
சென்னை சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டன. இதை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை, மற்றும் மதுரையில் பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.
மதுரையில் மட்டும் சுமார் 41 பஸ்கள் கல் வீச்சில் சேதப்படுத்தப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பஸ்கள் இரவு நேரத்தில் ரத்து செய்யப்பட்டன.
பொது மக்களின் பாதுகாப்பிற்காக தென் மாவட்டங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.
இந்த நிலையில் உசிலம்பட்டியில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 பஸ்கள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி மலையாண்டி கலையரங்கம் முன்பு மர்ம நபர்களால் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
அதேபோல விருதுநகர் மாவட்டம், சங்கரன் கோவிலிலும் அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்களை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications