சென்செக்ஸில் இன்றும் இறங்குமுகம்!
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்றும் இறங்குமுகம்தான். சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 327 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார பின்னடைவு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர். இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதல் 5 நிமிடங்களில் சென்செக்ஸில் 327 புள்ளிகள் குறைந்து, 8963 புள்ளிகளானது.
இதே போல் தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 89 புள்ளிகள் குறைந்து, 2709 புள்ளிகளானது.
அமெரிக்க பங்கு சந்தையில் நேற்று ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும், வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாகவும் பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பிற்பகலில் மெதுவாக இழந்த புள்ளிகளைப் பெறத் துவங்கிய சென்செக்ஸ், மாலையில் வர்த்தக நேர முடிவில் 353.71 புள்ளிகளை இவந்து 8937 புள்ளிகளாக நிலைபெற்றது. நிப்டி 116.40 புள்ளிகள் குறைந்து 2683 ஆக இருந்தது.
சீனா, கொரியா, ஜப்பான், தைவான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் பங்குச் சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி நிலவியது.












Click it and Unblock the Notifications