மகாராஷ்டிரம்: மராட்டியர்களுக்கு 80% இட ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

Vilasrao Deshmukh
மும்பை: ராஜ் தாக்கரே கையில் எடுத்துள்ள மராத்தியர் பிரச்சினைக்கு கெளன்டர் தரும் வகையிலும், ராஜ் தாக்கரேவுக்கு பெயர் பூராவும் போய் விடக் கூடாதே என்ற ஆதங்கத்திலும், மகாராஷ்டிர காங்கிரஸ் அரசும், பதில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. உள்ளூர்க்காரர்களுக்கு அரசு வேலைகளில் 80 சதவீத இட ஒதுக்கீட்டை அது அறிவித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் கூறப்படுவது குறித்து முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கவலையுடன் கவனித்து வந்தார்.

தற்போது தொழில்துறை, சக்தி, தொழிலாளர் துறை ஆகியவை சேர்ந்து ஒரு முடிவை எடுத்துள்ளன. அதன்படி, இந்தத் துறையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மக்களுக்கு 80 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள் உள்ளூர்க்காரர்களாக கருதப்படுவார்கள்.

இந்த உத்தரவை அமல்படுத்துவதற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கமிட்டிகள் அமைக்கப்படும்.

ஆண்டுக்கு மூன்று முறை கூடி அரசின் நடவடிக்கை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து பரிசீலிக்கப்படும். மேலும், உள்ளூர்க்காரர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் இது வழி வகைகளை வழங்கும்.

வேலைக்கு ஆட்களை எடுப்போருக்கு கட்டாயம் மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்து என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+