இலங்கை ராணுவத் தளபதியின் பதவி நீடிப்பு

Subscribe to Oneindia Tamil

Fonseka
கொழும்பு: முல்லைத் தீவில் மாங்குளம் பகுதியில் புலிகளின் இன்னொரு தளத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.

ஏ-9 நெடுஞ்சாலைக்கு மேற்கே அமைந்துள்ள இந்தத் தளத்துடன் மாங்குளம்-ஒட்டுசூடன் சாலை தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆட்கள் மற்றும் பொருட்களை அனுப்புவது தடைபட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த சாலை மார்க்கமாகத்தான் கிழக்கு வன்னியிலிருந்து வீரர்களையும், பொருட்களையும் விடுதலைப் புலிகள் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குமலமுனையும் வீழ்ந்தது:

இதேபோல முல்லைத்தீவுக்கு அருகில் உள்ள குமலமுனை என்ற இன்னொரு பகுதியையும் ராணுவம் பிடித்துள்ளது. விமானப்படை உதவியுடன் இதைப் பிடித்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, முகமலைப் பகுதியில் ராணுவத்தின் ஊடுறுவலை தடுத்து விட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளன

முக்கிய தளபதிகளை அனுப்பிய புலிகள்:

இதற்கிடையே வட முனையில் ராணுவத்தின் தாக்குதலை சமாளித்து வெற்றி காண்பதற்காக முக்கிய தளபதிகளான ஜெர்ரி, முகுந்தன், கடல்பரிதி, புகழேந்தி, செந்தீர் ஆகியோரை விடுதலைப் புலிகள் இயக்கம் அனுப்பியுள்ளது. இவர்கள், வீரர்களுக்கு உதவுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பலாலி, முகமலை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் புலிகளுக்கும் ராணுவத்தும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தின் 53, 55வது படைப் பிரிவினர் இந்த மோதலில் ஈடுபட்டு்ள்ளனர். அவர்களுக்குத் துணையாக இன்பான்டரி பிரிவினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும் புலிகளின் ஆர்ட்டிலரி, மார்ட்டர் படைப் பிரிவினர் மீது விமானப் படை விமானங்களும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அதே நேரத்தில் முகமலை, கந்தல், கிலாலி ஆகிய இடங்களில் புலிகள் நடத்தி வரும் பதிலடித் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புலிகளின் 2 படகுகள் மூழ்கடிப்பு:

முல்லைத் தீவு அருகே இன்று காலை விடுதலைப் புலிகளின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், அதிலிருந்த 6 புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

நயாறு என்ற இடத்தில் புலிகளின் 7 படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 2 படகுகள் அழிக்கப்பட்டதாகவும், மற்றொரு படகு சேதமடைந்ததாகவும், கடற்படையின் செய்தித் தொடர்பாளர் மகேஷ் கருணரத்னே தெரிவித்துள்ளார்.

புலிகளின் தொலைத் தொடர்பை கண்காணித்ததில் தாக்குதலில் 6 புலிகள் உயிரிழந்த தகவல் தெரிய வந்தாகவும் அவர் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு விமானப் படையின் எம்.ஐ 24 ரக ஹெலிகாப்டர்கள் துணை புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பொன்சேகாவுக்கு பதவி நீடிப்பு:

இதற்கிடையே ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதிபர் ராஜபக்சே ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+