நெல்லை ஐடிஐ மாணவர்கள் திடீர் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை, பேட்டையில் உள்ள அரசு ஐடிஐ மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர்.
பேட்டையில் உள்ள அரசு ஐடிஐயில் 900 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் மற்றும் விடுதி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை.
இதுதொடர்பாக மாணவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்களை அடிப்படை வசதி கேட்டு வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications