ரூ. 1 கோடி நஷ்டஈடு கோரி கருணாநிதிக்கு ஜெ. வக்கீல் நோட்டீஸ்
சென்னை: சட்டக் கல்லூரி மோதலை தூண்டி விட்டதாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என முதல்வர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக கோவையில் முதல்வர் கருணாநிதியிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, ஜெயலலிதாவும், வைகோவும் இதை தூண்டி விட்டார்களோ என்னவோ என்று கூறியிருந்தார்.
இதற்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று எச்சரித்தார்.
இதையடுத்து, ஜெயலலிதா வழக்க தொடர்ந்தால் அதை சந்திக்கத் தயார் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மூலம் முதல்வர் கருணாநிதிக்கு, ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், சென்னை சட்டக்கல்லூரி யில் 12-ந் தேதி நடந்த மாணவர்கள் மோதலை ஜெய லலிதா தூண்டி விட்டதாக கோவையில் நடந்த பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது.
தவறான தகவல், ஜெய லலிதாவின் புகழுக்கு களங் கம் கற்பிக்கும் செயல், நீதி மன்றத்தில் இருக்கும் ஒரு பிரச்சினையை திசை திருப்புவதாகும். எனது கட்சிக்காரர் வன்முறையில் ஈடுபடும்படி யாரையும் தூண்டி விடவில்லை.
என் கட்சிக்காரர் அ.தி. மு.க. பொதுச் செயலாளராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். அவர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்தற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், எழுத்து மூலம் மன்னிப்பு கேட்பதுடன் பத்திரிகைகளிலும் அது வெளியாக வேண்டும்.
தவறினால் உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவதூறு பரப்பிய தற்காக ரூ.1 கோடி நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications