சென்செக்ஸ்: இன்றைய சரிவு 400 புள்ளிகள்!!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் இன்றும் கடும் சரிவு நிலவுகிறது. சர்வதேச பொருளாதார சூழல் எதிர்மறையாக மாறிவருவதால், இன்னும் சில வாரங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் 400 புள்ளிகள் சரிந்து வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக வங்கித் துறைப் பங்குகள் முன்னெப்போதும் சந்தித்திராத வீழ்ச்சிக்குள்ளாகின.
பிற்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 433 புள்ளிகள் குறைந்து 8339 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை நிப்டி 131 புள்ளிகள் குறைந்து 2503 ஆகவும் இருந்தது.
அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸில் இன்று வர்த்தக நேர முடிவில் 1426 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. நாஸ்டாக்கிலும் கடும் வீழ்ச்சி நிலவியது. 96 புள்ளிகள் சரிவைக் கண்டது நாஸ்டாக்.
ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரெயிட்ஸ் போன்ற பங்குச் சந்தைகளிலும் இன்று வீழ்ச்சிப் போக்கே நிலவியது.












Click it and Unblock the Notifications