சிறுமியை சுட்டுக் கொன்ற பிஎஸ்எப் வீரர்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்நகர்: மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் ஒரு சிறுமியை சுட்டுக் கொன்றார் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குகுலு காத்தூன் என்ற இடத்தில் பள்ளியிலிருந்து நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை பிஎஸ்எப்பின் 42வது பட்டாலியனைச் சேர்ந்த சல்ய குமார் என்ற வீரர் திடீரென சுட்டார்.
இதில் அந்தச் சிறுமி அலறியபடி சுருண்டு விழுந்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவள் பலியானாள்.
எந்தத் தவறும் செய்யாத அந்த சிறுமியை எதற்காக அவர் சுட்டார் என்று தெரியவில்லை. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications