நீலகிரியில் யானை மிதித்து தொழிலாளி பலி!
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: கோத்தகிரியில் யானை மிதித்து ஒருவர் பலியானார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ளது மாமரம் வெள்ளிக்கோம்பை. இந்த பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி மாணிக்கம்.
இவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு யானை குட்டி யானையுடன் வந்தது. மாணிக்கத்தை கண்டவுடன் யானை அவரை துரத்தியது. மாணிக்கம் தப்பியோடினார்.
ஆனால் அவரை யானை விடாமல் துரத்திச் சென்று தும்பிக்கையால் தாக்கியது. பின்னர் அவரை கீழே தள்ளி மிதித்தது. இதில் படுகாயமடைந்த மாணிக்கத்தை அந்த வழியே சென்ற சிலர் மீட்டு கோழிக்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்.












Click it and Unblock the Notifications