இலங்கைத் தமிழர் நிவாரண நிதி ரூ. 24 கோடியைத் தாண்டியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசு சேகரித்து வரும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி ரூ. 24.71 கோடியை எட்டியுள்ளது.
நேற்று தொழிலதிபர் வேணு சீனிவாசன் மற்றும் கிரசன்ட் பொறியியல் கல்லூரி அதிபர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் தலா ரூ. 5 லட்சம் அளித்தனர்.
சுந்தரம் கிளேட்டன் மற்றும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி சார்பாக தலா ரூ. 2.5 லட்சம் அளிக்கப்பட்டது.
அக்டோபர் 28ம் தேதி முதல் இந்த நிதி வசூல் நடந்து வருகிறது. முதல் நபராக முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 10 லட்சம் அளித்தார்.
நேற்றுடன் முதல்வரிடம் நேரடியாக நிதி அளிப்பது முடிவுக்கு வந்தது. இனிமேல் அனுப்ப விரும்புபவர்கள், தலைமைச் செயலாளருக்கு தபால் மூலம் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications