தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு
சென்னை: தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. பவுன் தங்கம் ரூ. 10 ஆயிரத்தை நோக்கி எகிறத் தொடங்கியுள்ளதால் மக்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பவுன் விலை ரூ.10 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வரலாறு காணாத உயர்வு காணப்பட்டது. கடந்த மாதம் 10-ந் தேதி பவுன் விலை 10,480 ரூபாயை தொட்டது. அதை தொடர்ந்து விலை சரியத் தொடங்கியது.
நவம்பர் முதல் வாரத்தில் பவுன் ரூ.8656-க்கு விற்கப்பட்டது. விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உயரத் தொடங்கியது.
நேற்று பவுன் ரூ.9024-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.40 அதிகரித்தது.
இன்று பவுன் விலை ரூ.9064. ஒரு கிராம் ரூ.1133-க்கு விற்கப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் பவுன் விலை விரைவில் ரூ.10 ஆயிரத்தை மீண்டும் எட்டிவிடும்.
தற்போது திருமண சீசன் என்பதால் தங்கத்திற்கு கிராக்கி கூடியுள்ளது. இதுவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் பாதுகாப்புக்காக தங்கத்தின் பக்கம் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனாலும், தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருவதாக தெரிகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலை குறைந்து காணப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications