ஜெயலலிதாவை சந்திக்கும் திட்டமில்லை-மார்க்சிஸ்ட்
தூத்துக்குடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவை தாங்களும் உடனடியாக சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.கே.ரங்கராஜன் கூறினார்.
அக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான ரங்கராஜன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டிய கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் சில நடவடிக்கைகள் தேவை இல்லை என்று நினைப்பதால் கூட்டத்துக்கு போகவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பரதன், ஜெயலலிதாவை சந்தித்த பிறகு டெல்லியில் எங்களது கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத்தை சந்தித்து ஜெயலலிதாவுடன் பேசியது குறி்த்து எடுத்துக் கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜெயலலிதாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். கூட்டணி குறித்து இரு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் சேர்ந்து தான் முடிவெடுப்பார்கள்.
ஒவ்வொரு தலைவரையும் இன்னொரு தலைவர் சந்திப்பதை எல்லாம் கூட்டணிக்கு அச்சாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் கூட்டணி என்றால் கேரளா, மேற்கு வங்காளம், திரிபுராவில் மட்டும்தான். மற்ற இடங்களில் நட்பு கட்சிகளோடு தொகுதி உடன்பாடு தான் செய்து கொண்டுள்ளோம்.
திமுகவுடனான உறவைப் பொறுத்தவரை அரசு செய்யும் நல்ல திட்டங்களை வரவேற்பதும், மக்களை பாதிக்கும் திட்டங்களை விமர்சிப்பதும், போராட்டங்கள் நடத்துவதுமாக எங்கள் உறவு உள்ளது என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications