தமிழக நிவாரணப் பொருட்கள் வன்னியை அடைந்தன

தமிழர் பகுதிகளில் இலங்கை படைகள் நடத்தி வரும் கடும் போரால் தத்தளித்து வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகிறது.
இதுவரை சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களான உணவு, உடை, மருந்து உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு உரிய சோதனைக்குப் பின்னர் இந்தியத் தூதரிடம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து இந்த நிவாரணப் பொருட்கள் 56 லாரிகள் மூலம் வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வன்னிப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான ஓமந்தையில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் அனைத்து பொருட்களும் முறையாக சோதிக்கப்பட்டன. பின்னர் உள்ளே செல்ல லாரிகள் அனுமதிக்கப்பட்டன.
இந்த லாரிகள் நேற்று வன்னியைச் சென்றடைந்தன. நிவாரணப் பொருட்களுடன் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் உடன் வந்துள்ளனர்.
இருப்பினும் நிவாரணக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழ் அதிகாரிகளை, ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தி விட்டனர்.
வன்னிப் பகுதியில், செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலமாக தமிழக நிவாரணப் பொருட்களின் விநியோகம் தற்போது தொடங்கியுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications