ஒகேனக்கல் பிரச்சினையில் பிரதமர் தலையிட மாட்டார்: மொய்லி

தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சினைகளை எழுப்பி, திட்டத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது கர்நாடகா.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அண்மையில் தமிழக அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக எல்லைக்குள் ஒகேனக்கல் இருப்பதாகக் கூறி, இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு வற்புறுத்தி வருகிறது. இதனை வலியுறுத்தி நேற்று கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் ஆளும் பா.ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லியிடம் நிருபர்க்கள் கேட்டனர்.
அப்போது அவர் கூறியதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கோ, மத்திய அரசோ நேரடியாக தலையிட முடியாது. இரு மாநில நீர்த் தேவை தொடர்புடைய இந்த பிரச்சினையில் இரு மாநில முதல்வர்களும் நேரடியாகப் பேசி தீர்வு காண வேண்டும்.
ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களால் ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படாது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விவகாரத்தை இரு மாநில அரசுகளும் அரசியலாக்குவதாக நான் கருதவில்லை.
மின்சாரம் மற்றும் நீர்ப் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே தீர்ப்பாயம் தீர்ப்பளித்து விட்டது. அதில் சில விஷயங்கள் தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அவற்றின் அடிப்படையில் பிரச்சினையை இரு மாநில அரசுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே இந்த விஷயத்தில் இரு மாநில அரசுகளும் கேட்டுக் கொள்ளாதவரை மத்திய அரசு தலையிடாது. இரு தரப்பு விவகாரங்களில் பிரதமரும் தலையிட முடியாது. இரு தரப்பினரும் பேசித்தான் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
தமிழக, கர்நாடக நீர்த்தேவை மற்றும் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்து விட்டது. அது விஷயத்தில் மாநில அரசுகள் தெரிவித்துள்ள ஆட்சேபம் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இரு மாநில அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சினையை அரசியலாக்காமல் தவிர்க்க வேண்டும் என்றார் மொய்லி.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications