கூடுதல் கட்டணம் - பள்ளி முதல்வர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது சாலைகிராமம். இங்கு ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பரவலான புகார் எழுந்தது.
இதனையடுத்து சிவகங்கை தொடக்க கல்வி அலுவலர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து பள்ளி தாளாளர் இக்னேஷியஸ் சேவியர், முதல்வர் ஏஞ்சல் மேரி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications