மாணவியை கடத்தி கற்பழித்து வீடியோ எடுத்த கும்பல்!

Subscribe to Oneindia Tamil

கோவை: சினிமா பாணியில் கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்து அதை வீடியோவில் பதிவு செய்துள்ளது ஒரு கும்பல். இதில் ஒரு நபர் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

கோவை ரேஸ் கோர்ஸ் ரெட் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. கல்லூரி மாணவி. நேற்று முன்தினம் தனது நண்பர் செல்வத்துடன் ஒரு காபி கடை முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்களை விசாரிக்க வேண்டும் என்று ராஜியையும், செல்வத்தையும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சூலூர் அருகே உள்ளஒரு பாழடைந்த பங்களாவுக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு கத்தியை காட்டி மிரட்டி இருவரையும் நிர்வாணப்படுத்தினர். அவர்களை விதவிதமான போஸ்சில் புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர். இருவரையும் இணைத்து வீடியோ படம் பிடித்தனர்.

இந்த புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ஒன்னறை லட்சம் பணம் தர வேண்டும் என்றும் , இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

அப்போது ராஜியை ஒரு தனி அறையில் வைத்து சிலர் கற்பழித்துள்ளனர். அதையும் வீடியோ படம் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் செல்வம், தனது செல்போன் மூலம் போலீஸாரைத் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் தப்பிக்க முயன்றது. போலீசார் விரட்டிச் சென்றதில் உக்கடத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் பிடிபட்டார். மற்றவர்கள் ஓடி விட்டனர்.

ராஜி மற்றும் செல்வத்தைப் போலீஸார் மீட்டனர். தப்பி ஓடிய மற்றவர்களின் பெயர்கள் கார்த்திக், ஜார்ஜ் என தெரிய வந்துள்ளது. அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+