இலங்கை-மின்வெட்டு: வணிகர்கள் 7 நாள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைப் பிரச்சினை மற்றும் மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் 7 நாட்களுக்கு தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேரவைத் தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் பிரச்சினை முதல் மின்வெட்டு வரை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை.
விலைவாசி உயர்வு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, நகராட்சி கடைகள் பிரச்சினை, மக்கள் விரோத சாலை விரிவாக்கம் என வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சினைகளும் அப்படியே நீடிக்கின்றன.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக வருகிற 26ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை 7 நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications