நிதி நெருக்கடி தீர ரூ.150 கோடியில் யாகம்! 3,000 சாமியார்கள் பங்கேற்பு
காந்தி நகர்: உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தைச் சரிபண்ண ஒபாமா தொடங்கி, உள்ளூர் ஷேர் புரோக்கர்கள் வரை பலவித யோசனைகளைச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் குஜராத்தில் சாமியார்கள் கோஷ்டி ஒன்று புதுவித யாகம் ஒன்றை அறிவித்துள்ளது.
துர்கை அம்மன்தான் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என 3 ஆயிரம் சாமியார்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு யாகத்தை தொடங்கி உள்ளனர்.
மேசானா மாவட்டம் ராமசானாவில் இந்த யாகம் நடக்கிறது. தடங்கலில்லாமல் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு நடத்தப்படும் யாகம் இது. இதற்காகும் செலவு ரூ.150 கோடியாம்!
கோடி சந்தி மகாயக்ன சேவா சமிதி (கேசிஎம்எஸ்எஸ்) என்ற அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
குஜராத் மாநிலம் தவிர சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புரோகிதர்கள் இதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். யாகம் இப்போது 15 நாட்களை கடந்துவிட்டது. இடையே நிறுத்தப்படாமல், இரண்டாண்டுகளுக்கு தொடர்ந்து யாகம் நடைபெறும்.
முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசும் இதற்குத் தேவையான ஒத்துழைப்பை அளித்து வருகிறது.
இந்தியாவை ஒருத்தராலும் அசைச்சுக்க முடியாது... அசைச்சுக்க முடியாது!!
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications