10ம் வகுப்பு: அறிவியல், கணித பாடங்களில் கடின பகுதிகள் நீக்கம்
சென்னை: பத்தாம் வகுப்பு அறிவியல் மற்றும் கணிதப் பாடப் பிரிவுகளில் கடினமானதாக உள்ளதாக புகார் கூறப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னையி்ல் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசு பாடத் திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் கடினமான பகுதிகள் இருப்பதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து ஆய்வு செய்த போது கணிதம், அறிவியல் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பாடங்களில் மாற்றம் செய்வது குறித்து புத்தக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் அளித்த பரிந்துரையின் படி கணிதம், அறிவியல் பாடங்களில் கடினமான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் அரையாண்டு, முழு ஆண்டு தேர்வில் இருந்தே இந்த பாட நீக்கம் அமலுக்கு வருகிறது. மாநில கல்வி திட்டத்தின் படி 10-ம் வகுப்பு படிக்கும், மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
மழை நேரங்களில் அரசு விடுமுறை அறிவித்த பிறகும் விடுமுறை விடாத தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications