யுஎஸ் தூதர் வீட்டு பாதுகாப்பு-வராத போலீஸார்
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 போலீஸார் சொல்லாமல் கொள்ளாமல் பணிக்கு வராததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அபிராமபுரம் டர்ன்புல்ஸ் ரோட்டில் வசிக்கும் அமெரிக்க துணைத் தூதரின் வீட்டுக்கு ஷிப்ட் முறையில் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு எப்போதும், இயந்திரத் துப்பாக்கியோடு ஆயுதப்படை போலீசார் காவல் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி வரை அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த 3 போலீஸார் வரவில்லை.
தினசரி, இப்பாதுகாப்புப் பணியை தேனாம்பேட்டை உதவி கமிஷனர் ரவீந்திரன் நேரடியாக சென்று கண்காணிப்பார்.
நேற்று காலை அவர் வந்தபோது, பாதுகாப்பு போலீசார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஆயுதப்படையைச் சேர்ந்த வேறு 3 போலீஸார் அங்கு பணி அமர்த்தப்பட்டனர்.
சொல்லாமல், கொள்ளாமல் பணிக்கு வராமல் இருந்த அந்த 3 காவலர்கள் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 3 பேருக்கும் விளக்கம் கேட்டு மெமோ அளிக்கப்பட்டுள்ளது.
துணைத் தூதர் அலுவலக பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குளறுபடியால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications