சிறந்த தமிழ் சாப்டவேர் தயாரிப்பாளருக்கு பரிசு: அரசு அறிவிப்பு
சென்னை: சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பாளருக்கு பரிசு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்து.
கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் மென்பொருள்களில் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தேர்வு செய்து, அதை உருவாக்கியவருக்கு கணியன் பூங்குன்றனார்' பெயரில் பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதுடன் அந்த நிறுவனத்துக்கு பாராட்டிதழ் வழங்கப்படும்.
இது தமிழ் வளர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்படும் மென்பொருளாக இருக்க வேண்டும். தனியாளாகவோ, கூட்டு முயற்சியிலோ, நிறுவனத்தாலோ உருவாக்கப்படலாம். கூட்டு முயற்சி என்றால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள பதிவுக் கட்டணம் ரூ.100-ஐ தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் பணமாக செலுத்தலாம். தமிழ் வளர்ச்சி இயக்குனர், சென்னை என்ற பெயரில் டி.டி. எடுத்து அனுப்பலாம். அடுத்த மாதம் டிசம்பர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பங்களை, எழும்பூர், ஹால்ஸ் சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம். 044-28190412, 13 ஆகிய தொலைபேசி எண்களில் விவரங்களைக் கேட்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"மதம் மாறலைன்னா வேலையை விட்டு தூக்கிடுவோம்.." விப்ரோவில் பெண் ஐடி ஊழியருக்கு மிரட்டல்! என்ன நடந்தது -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications