புதுவையி்ல் கன மழை-வெள்ளக்காடு

Subscribe to Oneindia Tamil

Rain
புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகள் பல நீரில் மிதக்கின்றன.

கடந்த 3 நாட்களாக புதுச்சேரியில் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக புதுச்சேரி வெள்ளக்காடாகியுள்ளது.

புதுச்சேரியின் புறநகர்களில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடல் கொந்தளிப்பும் காணப்படுவதால் புதுவையில் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

புதுச்சேரியைச் சுற்றிலும் உள்ள ஏராளமான ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.

கடந்த 12 மணி நேரத்தில் புதுச்சேரியில் 6.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கன மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளன.

அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர கால தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்துப் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் இன்றும் மூடப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு உடனடியாக 10 கிலோ இலவச அரிசி வழங்க மாநில உணவுத்துறை அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+