தனி ஈழம் சாத்தியமில்லை: மார்க்சிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: இலங்கையில் தற்போது 30 லட்சம் தமிழர்களே இருப்பதால் அங்கு தனிநாடு சாத்தியம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கூறினார்.

திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் போர் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அங்கு பாதிக்ப்பட்ட தமிழர்களுக்கு உடனடி தேவை நிவாரணப் பொருட்களே. அதை உடனே கிடைக்க உரிய நடவடிக்கை தேவை.

இலங்கையில் தற்போது 30 லட்சம் தமிழர்களே உள்ளதால் அங்கு தனிதமிழ்நாடு சாத்தியம் இல்லை.

விடுதலைப் புலிகளின் தீவிரவாத போக்கு மக்களுக்கு பலனை ஏற்படுத்தப் போவதில்லை. எனவே பேச்சுவார்த்தை மூலம் தான் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.

மின் வெட்டால் தொழில்கள் மட்டும் இன்றி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு எல்லா தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

சட்டக் கல்லூரி மாணவர் பிரச்சனையில் காவல்துறை மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதில் அரசின் கவனக்குறைவும் வெளிப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித்தவித்து வரும் விவசாயிகள் தற்போது போலி நெல் விதையால் சிக்கிதவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக ரூ 15,000 வழங்க வேண்டும்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் 19 சட்டங்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் மோசமான சட்டங்களும் அடங்கும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+