இந்திய, பாக். உள்துறை செயலாளர்கள் இன்று பேச்சு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: இந்திய, பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் மட்டத்தில் இன்று ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது.
தீவிரவாதம், கள்ள நோட்டு, போதைப் பொருள் நடமாட்டம், கைதிகள் பரிமாற்றம், விசா வழங்கல் உள்ளிட்டவை குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப் பேச்சுவார்த்தையின் ஒரு கட்டமாக இன்றையப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்தியத் தரப்பில் மத்திய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு உள்துறை செயலாளர் சையத் கமல் ஷா தலைமையிலான குழுக்கள் கலந்து கொள்கின்றன.
கடைசியாக இரு நாட்டு உள்துறைச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்றது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications