குவைத்தில் புலிகளுக்கு நிதி சேகரிப்பு-இலங்கை
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத்தில் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்புக் கூட்டம் நடந்துள்ளதாக அந் நாட்டிடம் இலங்கை அரசு புகார் கூறியுள்ளது.
மிர்காப் என்ற இடத்தில் குவைத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் சிலர் ரகசியக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாகவும், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த இந்த ரகசியக் கூட்டத்தில் நிதி சேகரிக்கப்பட்டு புலிகள் இயக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இலங்கை கூறியுள்ளது.
இதுகுறித்து குவைத்துக்கான இலங்கைத் தூதர், குவைத் வெளியுறவுத்துறை உயர் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications