மழையில் கரைந்த உப்பளங்கள்-50000 பேர் வேலை இழப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 50,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழை நீடித்து வருகிறது. அதிலும் கடந்த 5 தினங்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் பிரதான தொழிலான உப்பு தொழில் அடியோடு முடங்கி விட்டது.
இந்த ஆண்டு மட்டும் 4 முறை மழையினால் உப்பளங்கள் அழிந்துள்ளன. தற்போதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர பரப்பில் உற்பத்தி செய்யப்பட்டிருந்த உப்பளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி விட்டது. இதனை நம்பியுள்ள 25,000 தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தீப்பெட்டி உற்பத்தியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் பாதிப்படைந்துள்ளனர். இந்த தொடர் மழையினால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி விட்டது.
சுமார் 50,000 தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். தூத்துக்குடி நகரில் பிரதான சாலைகள் அனைத்தும் மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications