தீவிரவாதிகளிடமிருந்து தப்பியவர்களின் திகில் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல ராக் பாடகர் பிரின்ஸின் மனைவியான கனடாவைச் சேர்ந்த மனுவேலா டெஸ்டோலினி, மும்பை தீவிரவாதத் தாக்குதலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள டெஸ்டோலினி, மும்பையில் உள்ள தாஜ் மஹால் ஹோட்டலில் நேற்று இரவு இரவு சாப்பாட்டுக்காக தனது தோழர், தோழியருடன் வந்திருந்தார்.

அப்போது நடந்தது என்ன என்பது குறித்து மனுவேலா டெஸ்டோலினி கூறியதாவது...

நாங்கள் அனைவரும் சாப்பாட்டுக்காக கூடியிருந்தோம். அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. முதலில் எங்களுக்கு அது தெரியவில்லை.

அப்போதுதான் ரெஸ்டாரென்ட்டின் முன்பக்க வாசலில் ஒருவர் துப்பாக்கிக் குண்டு பட்டு விழுவதை எங்களது நண்பர் ஒருவர் பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அங்கிருந்த அனைவரும் எழுந்த ஓட ஆரம்பித்தோம்.

செல்போன்கள், பர்ஸ்கள் என கையில் வைத்திருந்த எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என ஓட ஆரம்பித்தோம்.

அந்த இடமே பெரும் பீதியுடன் காணப்பட்டது. என்னும் நிறையப் பேரப் ஓடி வந்தனர். சமையலறை, பால்ரூம் வழியாக வந்த நாங்கள் பால் ரூமில் தஞ்சமடைந்தோம். வெளியே கையெறிகுண்டுகளை வீசுவதும், துப்பாக்கிகளால் சுடும் சத்தமும் கேட்டது.

இருளடைந்த அந்த அறையில் என்னைப் போல கிட்டத்தட்ட 200 பேர் அடைந்து கிடந்தோம். பல மணி நேரம் நாங்கள் அங்கேயே இருந்தோம். வெளியில் துப்பாக்கிச் சத்தமும், கையெறி குண்டுகளின் வெடிச் சத்தமும் காதைப் பிளந்தது.

பின்னர் பத்து மணிக்கு மேல் ஹோட்டல் ஊழியர்கள் அங்கு வந்து எங்களை வெளியேற்றினர். முதலில் பெண்களையும், குழந்தைகளையும் வெளியே அனுப்பினர்.

சரி தப்பி விட்டோம் என நினைத்தோம். ஆனால் மறுபடியும் எங்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து வேகமாக ஓட ஆரம்பித்தோம்.

பின்னர் ஒரு இடத்தில் அனைவரும் தஞ்சம் புகுந்தோம். அந்த இடத்திற்கு வந்த பின்னர்தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நிலைமையே ஏற்பட்டது என்றார்.

தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த சி.என்.என். நிறுவனத்தைச் சேர்ந்த யாஸ்மின் வோங் என்ற பெண் கூறுகையில், துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், நான் எனது படுக்கைக்குள்ளேயே புதைந்து கிடந்தேன்.

எனது அறைக்கு ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், அறையை விட்டு வெளியேற வேண்டாம். அறை விளக்கை அணைத்து விடுங்கள். அறைக் கதவுக்கு அருகே ஈரத் துணியை போட்டு வையுங்கள். அடுத்த போன் வரும் வரை வெளியே வர வேண்டாம் என உத்தரவிட்டார். அதன்படியே நான் நடந்து கொண்டேன்.

அப்போது எனது அறை ஜன்னலுக்கு மேலே தீயும், புகையும் வருவதை பார்த்து நான் எட்டிப் பார்த்தபோது, எனது அறைக்கு மேல் அறையில் இருந்த ஒருவர் ஜன்னல் வழியாக தப்பி வருவதைப் பார்த்தேன். மேலே தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினரும், போலீஸாரும் வெளியே வருமாறு உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து நானும் அங்கிரு்து ஓடி வெளியே வந்தேன்.

வரும் வழியெல்லாம் ஏராளமான உடல்களைத் தாண்டித்தான் வந்தேன். வெளியில் செல்லும் வழியைத் தேடி ஓடிய நான், கடைசியில் நீச்சல்குளத்தின் நுழைவாயில் வழியாக வெளியேறினேன் என்றார் வோங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+