கண்காணிப்பு கேமராக்களில் சிக்கிய தீவிரவாதிகள்

மும்பையை மட்டுமல்லாமல் உலகையே உலுக்கியுள்ள மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் நாடகம் 3வது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதிக நவீன இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம், படு பக்காவாக திட்டமிட்டு தீவிரவாதிகள் நடத்தியுள்ள இந்த துணிகர தாக்குதல், உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் மும்பை மாநகர சத்ரபதி ரயில் நிலையத்தில் வைக்கட்டுள்ள ரகசியக் கேமராக்களில் இரு தீவிரவாதிகளின் உருவம் படமாகியுள்ளது.
இருவரும் அங்கு நேற்று முன் தினம் தாக்குதல் நடத்திவிட்டு வெளியே நடந்து செல்வது படமாகியுள்ளது. ஆனால், முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை.
அதே நேரத்தில் தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள ரகசியக் கேமராக்களில் இவர்களது முகங்கள் தெளிவாகவே படமாகியிருக்கலாம், அவர்கள் நடத்திய தாக்குதல், பலியான மக்களின் கதறல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த சிசிடிவிக்களின் வீடியோ ரெக்கார்டிங்குகளை மும்பை போலீசார் தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளனர். அதில் மத்திய உளவுப் பிரினருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதைத் தவிர மும்பை நகரில் சீகாம், ஹனிவெல், சீமன்ஸ் மற்றும் கோத்ரெஜ் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் ரகசிய டிவி கேமராக்களை (சிசிடிவி) பொருத்தியுள்ளன. 24 மணி நேரமும் இவற்றின் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்ரபதி சிவாஜி ரயில் சந்திப்பு முதல் தானே வரையிலான 30 கிலோமீட்டர் பாதை முழுவதும் சிசிடிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல சீகாம் நிறுவனம், சர்ச்கேட் முதல் விரார் வரையிலான 60 கிலோமீட்டர் பாதையில், 820 ரகசியக் கேமராக்களைப் பொருத்தியுள்ளது.
மும்பை மாநகரில் மொத்தம் 100 போக்குவரத்து சிக்னல்களிலும் இந்த நிறுவனம் ரகசியக் கேமராக்களைப் பொருத்தியுள்ளது.
சித்திவிநாயக் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சர்ச்கேட் - விரார் மார்க்கத்தில் முழுக்க முழுக்க சிசிடிவிக்களை சீகாம் நிறுவனம் பொருத்தியுள்ளது. இதற்கு மாதந்தோறும் ரூ. 11 லட்சத்தை சேவைக் கட்டணமாக அரசிடமிருந்து பெறுகிறது.
ஆனால் மும்பை மாநகரின் கடலோரப் பகுதிகளில் இப்படி ஒரு கண்காணிப்பு கட்டமைப்பு இல்லை. இதனால்தான் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுறுவியதை பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டதாக பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எம்.எச்.01 இசட்ஏ 102, எம்.எச்01, பிஏ 5179 ஆகிய இரு வாகனங்களில் தப்பி ஓடிய சில நிமிடங்களுக்குப் பின்னரே மும்பை வாசிகளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. இந்த வாகனங்கள் குறித்த தகவல் தெரிந்தால் 100 எண்ணுக்குப் போன் செய்யவும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இது மட்டும் போதாது என்ற பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் நாம் அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை நாம் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்று கேட்கிறார் இன்டர்நெட் பாதுகாப்பு நிபுணரும், எப்ஐசிசிசிஐ பாதுகாப்பு கமிட்டியின் தலைவருமான விஜய் முக்கி.
அவர் கூறுகையில், அமெரிக்க விமான நிலையங்களில், கேட்பாரற்று ஒரு பேக் அல்லது சூட்கேஸ் போன்றவை கிடந்தால், அடுத்த ஐந்து நிமிடங்களில் அதுகுறித்து கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு கண்டுபிடித்து தெரிவித்து விடும்.
ஆனால் தாஜ் ஹோட்டல் மற்றும் ஓபராய் ஹோட்டலில் பை நிறைய கிடந்த ஆயுதங்களை நாம் கண்டுபிடிக்க நெடு நேரமானது.
மின்னணு கண்காணிப்புக்கு இந்தியா அதிக அளவில் செலவிடுவதில்லை. அதுகுறித்து தீவிர கவனமும் செலுத்துவதில்லை. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க மின்னணு கண்காணிப்பு கட்டமைப்புக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications