2 குழுக்களாக பிரிந்து தீவிரவாதிகளை தாக்கினோம்: கமாண்டோக்கள்
மும்பை: தாஜ் ஹோட்டலுக்கு ஒரு குழுவும், ஓபராய் ஹோட்டலுக்கு ஒரு குழுவும் என இரண்டாகப் பிரிந்து சென்று தீவிரவாதிகளுடன் சண்டையிட்டோம் என கடற்படை கமாண்டோக்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை தீவிரவாதிகளை வேட்டையாடியதில் கடற்படை கமாண்டோக்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டலி்ல் தாக்குதல் நடத்திய தீவரவாதிகளுடன் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஆங்க்ரே போர்க்கப்பலைச் சேர்ந்த அதி விரைவு கமாண்டோக்கள் தீரத்துடன் சண்டையிட்டு பல தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதல் குறித்து கமாண்டோக்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர் கூறுகையில், தாஜ் ஹோட்டலுக்கும், ஓபராய் ஹோட்டலுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்றோம்.
தாஜ் ஹோட்டலுக்குப் போனபோது 15 இறந்த உடல்களை நாங்கள் பார்த்தோம். ஹோட்டல் ஊழியர்களிடமிருந்து ஹோட்டல் குறித்த வரைபடத்தைப் பார்த்து அதை வைத்து உள்ளே சென்று வேட்டையில் இறங்கினோம்.
தாஜ் ஹோட்டலி்ன் சிசிடிவி அறைக்குள் செல்ல முயன்றபோது அங்கு தீவைக்கப்பட்டிருந்ததால் அது எரிந்து கொண்டிருந்தது. எனவே எங்களால் உள்ளே போக முடியவில்லை.
ஒரு அறையில் 1200 டாலர் அமெரிக்கப் பணம், வெளிநாட்டு அடையாள அட்டைகள், கிரெடடிட் கார்டுகளை கண்டு மீட்டோம்.
ஓபராய் ஹோட்டலிலிருந்து 100 பேரை நாங்கள் மீட்டு வெளியேற்றினோம்.
தாஜ் ஹோட்டலின் 8வது மாடியிலிருந்து தீவிரவாதிகள் எங்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications