டைம்ஸ் ஆப் இந்தியா பெண் நிருபர் கதி என்ன?
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கன்சல்டிங் எடிட்டராக பணியாற்றி வரும் சபீனா சேகல் சைக்கியா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது கதி என்ன என்று தெரியவில்லை.
பிரபல சமையல் கலை விமர்சகரான சபீனா, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கன்சல்டிங் எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அவர் அங்கு தங்கியிருந்தார்.
இவரது கணவர் சாந்தனு சைக்கியாவும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் ஆவார். அலுவலகப் பணியாக 2 நாட்களுக்கு முன்புதான் மும்பை வந்தார் சைக்கியா. தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் தனது மனைவியைத் தொடர்பு கொள்ள முயன்றார் சாந்தனு. ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் மும்பை கிளம்பி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் முதலே சைக்கியாவின் செல்போன் செயலிழந்து உள்ளது.
இதுகுறித்து சாந்தனு கூறுகையில், எனது மனைவி தங்கியிருந்த பகுதியில்தான் முதலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் தங்கியிருந்த அறைப் பகுதியில்தான் முதலில் தீப்பிடித்துள்ளது.
இதனால் நான் எனது மனைவியை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவரது செல்போன் செயிலிழந்துள்ளது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
ஒன்று அவர் அறையில் ஏற்பட்ட தீயில் சிக்கியிருக்க வேண்டும் அல்லது பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை சபீனா குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை என்றார்.
சபீனா, ஒரு சமையல் கலை விமர்சகர் ஆவார். சமையல் கலை குறித்தும், ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகள் குறித்தும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications