ஹோட்டல்களில் 'கன்ட்ரோம் ரூம்' அமைத்த தீவிரவாதிகள்!
தாஜ் மற்றும் டிரைடன்ட் ஹோட்டல்களில் இந்த கட்டுப்பாட்டு அறைகளை அவர்கள் அமைத்துள்ளனர். அதி நவீனமான முறையில் இந்த கட்டுப்பாட்டு அறைகள் அமைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
பல மாதங்களாக திட்டமிட்டு, மிக மிக துல்லியமாக செயல்பட்டுள்ளனர் தீவிரவாதிகள்.
இதுகுறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், இந்த வரலாறு காணாத தீவிரவாதத் தாக்குதல் திடீரென நடத்தப்பட்டதல்ல. பல மாதங்களாக இதற்காக பக்காவாக திட்டமிட்டுள்ளனர்.
வெறும் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் மட்டும் தீவிரவாதிகள் வரவில்லை. மாறாக, எம்.பி.-6 போன்ற அதி நவீன ஆயுதங்களையும் உடன் கொண்டு வந்துள்ளனர்.
எந்தெந்த இடங்களைத் தாக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அவர்களுக்கு உள்ளூரிலிருந்து சிலர் தகவல் கொடுத்திருக்க வேண்டும். மிக மிக திறமையாக திட்டம் போட்டுள்ளனர்.
ஒரு கப்பல் மூலம் அவர்கள் பயணித்து வந்துள்ளனர். பின்னர் சிறிய ரக ரப்பர் படகுகள் மூலம் கேட் ஆப் இந்தியா பகுதிக்கு வந்திறங்கியுள்ளனர்.
கண் மூடித்தனமாக அவர்கள் மக்களை சுடவில்லை. எப்படி சுட வேண்டும், எத்தனை பேரை சுட வேண்டும், யாரைச் சுட வேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டு சுட்டுள்ளனர்.
முக்கிய போலீஸ் அதிகாரிகளை அவர்கள் குறி வைத்து சுட்டுத் தள்ளியுள்ளனர். இத்தனைக்கும் இந்த போலீஸ் அதிகாரிகள் புல்லட் புரூப் உள்ளிட்ட தற்காப்பு உபகரணங்களுடன் வந்தும் கூட அவர்களால் உயிர் தப்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வந்த வேகத்தில் சில விநாடிகளில் அவர்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்றார் சிபல்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!













Click it and Unblock the Notifications