இலங்கையில் அமைதி-நாகர்கோவிலில் பிரார்த்தனை
நாகர்கோயில்: இலங்கையில் அமைதி வேண்டி நாகர்கோவிலில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட வேண்டும் என்பதற்காக நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் அறநிலையத்துறை பணியாளர்கள் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் கையில் அகல் விளக்கு ஏந்தி இலங்கையில் அமைதி நிலவ வேண்டி ஒரு நிமிடம் மெளன பிரார்த்தனை செய்தனர்.
அப்போது ஓதுவார்கள் சிவபுராணம், தேவாரம் ஆகியவற்றை பய பக்தியுடன் பாடினார்கள். அதைத் தொடர்ந்து பூசாரி, சங்கல்ப பூஜை நடத்தினார்.
இது குறித்து இணை ஆணையர் பாஸ்கரன் கூறுகையில், அறநிலையத்துறை பணியாளர்கள் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடத்தி உள்ளோம்.
திருக்கோவிலின் எல்லா பணியாளர்களும் ஒரு நாள் சம்பள தொகையான ரூ.16 ஆயிரத்தை நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர் என்றார்.
கூட்டு பிரார்த்தனையில், உதவி ஆணையர் முத்து தியாகராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நடராஜன், மீனாட்சி மற்றும் கோவில் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications