தீவிரவாத தாக்குதலில் பலியான தொழிலதிபர்கள்

தெற்கு மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் ஓபராய் ஹோட்டல்கள் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நாரிமன் ஹவுஸும் மீட்கப்பட்டு விட்டது.
தற்போது அங்கு உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அவற்றை அடையாளம் காண குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் குழுமியுள்ளனர்.
தாஜ் ஹோட்டலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. ஆனால் ஓபராய் ஹோட்டலில்தான் அதிக அளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஹோட்டலில்தான் பல முக்கியப் பிரபலங்கள் ஏராளமான பேர் உயிரிழந்துள்ளனர்.
எஸ் வங்கியின் செயல் தலைவரும், கோ புரமோட்டருமான அசோக் கபூர், தொழிலதிபர் சுனில் பரேக், டெவலப்பர் பங்கஜ் ஷா, வக்கீல் அனந்த் பட்வரே ஆகியோர் இவர்களில் சிலர்.
கபூரின் உடல் 19வது மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. தனது மனைவி மதுவுடன் டின்னருக்கு அவர் ஹோட்டலுக்கு வந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மனைவி மது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
எஸ் வங்கியில், அவருக்கும், வங்கி நிர்வாக இயக்குநர் ரானா கபூருக்கும் 34 சதவீத பங்குகள் உள்ளன.
சுனில் பரேக், கப்பல் பிசினஸில் ஈடுபட்டிருந்தார். அவரது மனைவி ரேஷ்மாவும் ஓபராய் ஹோட்டலின் டிப்பின் எனப்படும் காபி ஷாப்பில் இருந்தபோது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இஸ்பாட் இன்டஸ்ட்ரியின் செயல் இயக்குநர் வினோத் கார்க்கின் மனைவி உமா கார்க், 19வது மாடியில் உயிரிழந்து கிடந்தார்.
கணவர் மற்றும் வெளிநாட்டு கிளையன்ட் சிலருடன் அவர் டின்னருக்கு வந்தபோது இந்த துரதிர்ஷ்டம் ஏற்பட்டது.
வினோத் கார்க் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
அதேபோல, ஷா மற்றும் பட் ஆகியோர் இன்னொரு டெவலப்பரான அபூர்வ பரேக்குடன் அதே ஹோட்டலின் காந்தஹார் ரெஸ்டாரன்ட்டில் இருந்தபோது, தீவிரவாதிகளிடம் சிக்கினர். இதில் பரேக் காயத்துடன் தப்பினார்.
பட் உள்ளிட்ட மற்றவர்கள் உயிரிழந்தனர். பிரபலமான சட்ட நிபுணர் பட் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலைச் சேர்ந்த ரப்பி மற்றும் அவரது மனைவி ஆகியோரின் உடல்கள் நாரிமன் ஹவுஸில் மீட்கப்பட்டன.
ரப்பி, அவரது மனைவி உள்பட ஐந்து பேரின் உடல்கள் நாரிமன் ஹவுஸிருந்து மீட்கப்பட்டன.
ரப்பி கவ்ரியேல் மற்றும் அவரது மனைவி ரிவ்கா ஹோல்ட்ஸ்பர்க் ஆகியோர் மும்பை சபாத் -லுபாவிட்ச்சின் இயக்குநர்கள் ஆவர்.
இவர்களின் மரணத்திற்கு உலகெங்கும் உள்ள யூத அமைப்புகள் கடும் அதிர்ச்சியும், சோகமும் வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் ரப்பி தம்பதியினரின் 2வயது மகன் மோஷே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். கூடவே அவனது பாட்டியும் உயிர் தப்பியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications