தீவிரவாத தாக்குதல்: இயல்பு நிலைக்குத் திரும்பும் மும்பை
மும்பை: பயங்கர தீவிரவாதத் தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்திருந்த மும்பை மாநகர மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
மக்கள் வெளி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையிலும், தீவிரவாதத்தின் அச்சுறுத்தலை அடுத்த நொடியே ஊதித் தள்ளும் தீரமிக்க மனோபாவம் கொண்ட மும்பை மக்கள், வழக்கமான வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
இருப்பினும் எப்போதும் நிரம்பி வழியும் மின்சார ரயில்களில் சற்று கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. நிற்கக் கூட இடம் இல்லாத நிலையில் பயணிக்கும் பயணிகள் நேற்றும் இன்றும் உட்கார்ந்து நிதானமாக பயணித்ததைக் காண முடிந்தது.
வங்கிள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ஊழியர்களின் எண்ணிக்கை முழு அளவில் இல்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன.
பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை வேட்டையாடி வரும் பகுதிகளில் மட்டும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் திறந்து வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தீவிரவாதத் தாக்குதல் நடந்த தெற்கு மும்பையில் மட்டும் அவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
பங்கு வர்த்தகம் வழக்கம் போல செயல்பட்டது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!













Click it and Unblock the Notifications