தீவிரவாதிகள் பிடியிலிருந்து மீண்ட சி.சுப்ரமணியம் பேரன்
கோவை: மும்பை தீவிரவாதத் தாக்குதலிலிருந்து முன்னாள் மகாராஷ்டிர ஆளுநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த சி.சுப்ரமணியத்தின் பேரன் விக்ரம் ராமகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
மறைந்த சி.சுப்ரமணியத்தின் பேரன் விக்ரம் ராமகிருஷ்ணன். இவர் மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது ஓபராய் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அப்போது தீவிரவாதிகள் தாக்குதலில் இறங்கினர். இதனால் அவர் ஹோட்டலை விட்டு வெளியே வர முடியாமல் போனது. கிட்டத்தட்ட 48 மணி நேரம் அவர் தனது அறைக்குள்ளேயே முடங்கியிருந்தார். நேற்று காலைதான் அவரை என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் மீட்டு வெளியேற்றியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை அவர் சொந்த ஊரான கோவை திரும்பினார். விமான நிலையத்தில் அவரது மனைவி ச்திரா, மகள்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் விக்ரம் கூறுகையில், உயிருடன் மீண்டது மகிழ்ச்சி தருகிறது.
நான் கிட்டத்தட்ட 48 மணி நேரம் அறையை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போயிருந்தேன். வெளியில் துப்பாக்கிச் சண்டை கடுமையாக இருந்தது. அவ்வப்போது கையெறி குண்டுகளின் சத்தமும் காதைப் பிளந்தது.
21வது மாடியில் இருந்த எனது அறை விளக்குகளை அணைத்து விட்டு இருட்டுக்குள்ளேயே இருந்தேன். சாப்பாட்டுக்கு எதுவும் இல்லை. வெறும் பழச்சாறைக் குடித்தபடி உயிரைக் கையில் பிடித்தபடி இருந்தேன்.
எனது குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசியபடி இருந்தது ஆறுதலாக இருந்தது.
நேற்று காலைதான் என்னை கமாண்டோப் படையினர் மீட்டனர் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications