மாலேகான்: ஒரு வழக்கில் புரோஹித்துக்கு ஜாமீன்
நாசிக்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித்துக்கு போலி ஆயுத உரிம வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள புரோஹித் மீது நவம்பர் 15ம் தேதி போலி ஆயுத உரிம வழக்கு பதிவானது. புனேவைச் சேர்ந்த ஷிரீஷ் டேட் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நாசிக் போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர்.
டேட் கொடுத்த புகாரில், எனக்கு ஆயுத உரிமம் வழங்க போலியான ஆவணங்களைத் தயாரித்து போலி உரிமத்தை வழங்கினார் புரோஹித் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாசிக் நீதிமன்றத்தில் புரோஹித் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி வி.வி. ஜோஷி, ரூ. 15,000 தனி நபர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இருப்பினும் பிற வழக்குகளில் புரோஹித்துக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் அவர் விடுதலையாக முடியாது.
இதற்கிடையே வழக்கு விசாரணைக்காக நாசிக் கொண்டு வரப்பட்ட புரோஹித், பின்னர் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள், புரோஹித்தை மீண்டும் மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.
-
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications