இந்திய எல்லையில் ராணுவத்தைக் குவிப்போம்: பாக். மிரட்டல்
டெல்லி: போர் பதட்டத்தை உருவாக்குகிறது இந்தியா. இந்த நிலை நீடித்தால், ஆப்கன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை, இந்திய எல்லைக்கு அனுப்ப நேரிடும் என பாகிஸ்தான் மிரட்டியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகைககள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானிலிருந்துதான் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது, ஆட்கள் வந்தது என இந்தியா குற்றம் சாட்டி வருவதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் இவ்வாறு மிரட்டல் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அந்த அதிகாரி பாகிஸ்தான் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவுடன் புதிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் எங்களால் கவனம் செலுத்த முடியாது என பாகிஸ்தான் அரசு, நேட்டோ மற்றும் அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டது.
இந்தியப் பகுதியிலிருந்து புதிய நிகழ்வுகள் ஏற்பட்டால், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாங்கள் கவனம் செலுத்த முடியாது.
எங்களது மேற்குப் பிராந்திய படைகளை இந்தியப் பகுதிக்கு மாற்ற நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.
இப்படிக் கூறினால்தான் அமெரிக்கா அவசரமாக தலையிட்டு இந்தியாவை சமாதானப்படுத்தும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீவிரமாக இறங்காது என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவதாக தெரிகிறது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications