ரகசிய இடத்தில் அஜ்மல் கஸாப்: ரா-ஐபி விசாரணை

அவனிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்து வருகின்றன.
அவன் கூறிய தகவலின்படி 24 பேருக்கு பாகிஸ்தானின் முஸாபராபாத்தில் வைத்து 2 வருடம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10 பேரை மும்பை தாக்குதலுக்காக தேர்வு செய்துள்ளனர்.
இவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரஹ்மான் என்பவரே நேரடியாக பயிற்சி அளித்துள்ளார். முஸாபராபாத் தவிர கராச்சி உள்பட 7 இடங்களில் வைத்து இந்தப் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன.
தீவிர உடல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி, ஆயுதங்களைக் கையாள்வது, பல வகையான துப்பாகிகளைக் கையாள்வது, நீச்சல் பயிற்சி, சேட்டிலைட் போன்களை கையாள்வது, ஆர்டிஎக்ஸ் குண்டுகளை தயாரிப்பது, டைமர்களை செட் செய்வது என கமாண்டோக்களுக்கு இணையான பயிற்சி தரப்பட்டுள்ளது.
இவர்களில் 4 பேர் மும்பைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் தாஜ் ஹோட்டல், ஓபராய், நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களை பார்வையிட்ட பின்னர் திரும்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தகவல்களை விசாரணை அதிகாரிகளிடம் கொட்டியுள்ளான் கஸாப். அவன் வைக்கப்பட்டு்ள்ள இடம் பாதுகாப்புக் காரணங்களுக்காக மிக ரகசியமாக வைக்கப்பட்டு்ள்ளது. அவனுக்கு மிக பலத்த கமாண்டோ பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அவன் சாப்பிட மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவும் அவனுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளில் ஒன்று தான் என்கிறார்கள் அதிகாரிகள்.
பட்டினி கிடந்து உயிரை விட வேண்டும், விவரங்களைச் சொல்லக் கூடாது என்பதே இவனுக்கு தரப்பட்ட உத்தரவு. ஆனால், அவனை எந்த வகையில் உயிரோடு வைக்க வேண்டும் அந்த வகையில் காப்பாற்றி வருகின்றனர் அதிகாரிகள்.
இவனிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களை கறக்க முடியும் எனத் தெரிகிறது.
2 ஆர்டிஎக்ஸ் குண்டுகள் செயலிழப்பு:
இதற்கிடையே தாஜ் ஹோட்டலில் டைமர்கள் பொறுத்தப்பட்ட நிலையில் கிடந்த இரு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை கமாண்டோக்கள் கைப்பற்றி நேற்று பாதுகாப்பான இடத்தில் வெடிக்க வைத்தனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தான் இந்த குண்டுகளை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications