எப்.பி.ஐ அதிகாரிகளைக் 'கைது' செய்த போலீஸ்!
மும்பை: மும்பைக்கு தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்திய விசாரணைக்கு உதவுவதற்காக வந்த அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் இருவரை மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக கைது செய்தனர்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு உதவ 7 பேர் கொண்ட எப்.பி.ஐ அதிகாரிகள் நேற்று மும்பை வந்தனர்.
அவர்களில் 5 பேர் முன் கூட்டியே விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். பின்னால் வந்த இரண்டு பேரின் பைகளில் சில கருவிகள் இருந்தன.
இதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் எப்.பி.ஐ அதிகாரிகள் எனத் தெரியாமல் இருவரையும் கைது செய்து விட்டனர்.
தங்களுக்குப் பின்னால் வந்த இருவரையும் காணவில்லை என்பதை அறி்நத முன்னால் சென்ற எப்.பி.ஐ. அதிகாரிகள் உள்ளே வந்து விசாரித்தபோதுதான் நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் தாங்கள் யார் என்பதைச் சொல்லி இருவரையும் மீட்டு வெளியேறினர் எப்.பி.ஐ. குழுவினர்.
எப்.பி.ஐ. குழுவினர் வருவதைக் கூட சரிவரத் தெரிவிக்காமல் விமான நிலைய அதிகாரிகள் செய்த குழப்பத்தால் இந்த சொதப்பல் ஏற்பட்டு விட்டது.
இதையடுத்து இந்தக் குழுவினர் தாஜ் ஹோட்டலுக்குச் சென்று தடயவியல் சோதனைகளில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலிய போலீஸ் குழு:
இந் நிலையில் இந்த விசாரணைகளில் எந்தெந்த தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்புள்ளது என்பது குறித்த விசாரணையில் இந்தியாவுக்கு உதவ ஆஸ்திரேலியாவில் இருந்து தீவிரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 7 அதிகாரிகள் மும்பை வந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications